Pages

Labels

Wednesday, November 30, 2011

இது பசங்களுக்கு மட்டும் ( girls not read it)

தாஸ் சார்க்கு நன்றி      
 ஏற்கனவே உங்களுக்கெல்லாம் தாஸ் சாரை அறிமுகம் செய்திருந்தேன். அவர் ஒரு நாள் என் கல்லூரியில் மாணவர்களின் வேண்டுகோலுக்கினங்க காதல் டிப்ஸ் கொடுத்தார் அதை நான் என் நண்பர்கள் அனைவர்களிடமும் பகிர்ந்துக்கொள்ள அசை அதான் இப்போ சொல்லப்போறன்..........

      லவ் டிப்ஸ் 
  1. காலையில் காதலிக்கு காலை வணக்கம் மெசேஜ் மற்றூம் கொஞ்ஜலுடன்.
  2. காதலியை பார்க்க போகும்பொழுது அவளது போட்டோவை ஸ்கிரீன்சேவரா வச்சிக்கனும்.
  3. அவளுடைய பெயர் முதல் எழுத்தை கீசைனில் வச்சிக்கனும்.
  4. தேட்டர் போனா அவளது முகத்தை ஐந்து நிமிடத்திற்கு ஒருத்தடவை பர்க்கனும் (வேர வழி இல்லை).
  5. அவளது பெயரில் ஏதும் பாடல்கள் இருந்தால் ஹெலோ டியூனா வைக்கனும்.
  6. வேர வழியே இல்லை “கவிதை” சொல்லனும் அடிக்கடி.
  7. ஹோட்டல் போனா மெனு காற்ட அவங்ககிட்ட கொடுக்கன்னும்.
  8. “நீ தேவதை போல இருக்கனு” சொல்லனும்.
  9. அவங்க எதவது பொண்ணுங்கள அறிமுகம் செய்தால் கை கொடுக்க கூடாது வணக்கம் தான் சொல்லனும்
இது இப்போதைக்கு போதும் (try it)

தமிழ் சினிமாவின் ஆக்கமும் அதில் என் ஏக்கமும்

என் உயிர் அப்பா
நம்மை கடந்துச் சென்ற பல ஆண்டுகளில் வெளிவந்த பல திரைப்படங்களில்  கதாநாயகன் மற்றும் கதாநாயகியும் தானது அம்மா மீது மட்டுமே பாசமாக உள்ளாது போன்றும் அத்திரைப்படங்களில் அம்மா மீதான பாசத்தை வெளிப்படுத்தும் விதமான பாடல்களும் இடம்பெற்று இருந்தன . தற்போது  நான் கூறவருவது என்னவென்றால் பொதுவாக ஒரு குழந்தையை பெற்று எடுப்பதற்கு அப்பாவுக்கும் சமமான  உள்ளாது. என்பதை  நம்  தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு தெறியாது போல .இல்ல அப்பா செண்டிமெண்ட் வராது போல.அப்படி  அப்பா செண்டிமெண்ட் படம் எடுத்த படங்களில் சில வாரணம் ஆயிரம் ,நான் மகான் அல்ல . எனது ஆசை தமிழ் சினிமாவின் ஆக்கத்தை மாற்றுவேன் . என் ஏக்கத்தை நிரைவேற்றுவேன். இதற்காக என்றும் நான் முயல்வேன்

Tuesday, November 29, 2011

எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெறியும் .

         நமது தமிழ் மக்களுக்கும் TREND என்ற நோய் வந்து விட்டது. நான் இதை எப்படி சொல்கிறேன் என்றால் நம்ம தமிழ் பெண்கள் அனைவரும் இப்ப தமிழ் பேசுவது டீசண்ட் இல்லயாம் ENGLISH தான் பேசுராங்க ONLY PIZZA BURGER தான் சப்புடுராங்க. எதாவது ஒரு பொண்ணுகிட்ட பேசுனா உடனேயே நம்மலுக்கு புறியாத ENGLISHல பேசுரது அதையும் மீறி நம்ம தமிழ்ல பேசுனா ”எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெறியும் .” என்று அழகாக தமிழ்ல சொல்லுவாங்க .  பசங்களா இனிமே ENGLISHல பேசுங்க ஆனா பாத்து பேசுங்க இல்லனா உங்கலுக்கும் வந்துடும் TREND

Monday, November 28, 2011

விளையாட ஆட்கள் இல்லை


விளையாட ஆட்கள் இல்லை
 குழந்தைகள் விளையாட கட்டப்பட்ட விளையட்டுப் பூங்கா இன்று காதலர்கள் கடலை போட மட்டுமே பயன்படுகிறது . இனி குழந்தைகள் விளையாட இடம் கிடைக்குமா .இல்லை இடம் கொடுப்பார்களா .

மயக்கம் என்ன .....?

மயக்கம் என்ன....?
       மயக்கம் என்ன திரைப்படம் தமிழ் சினிமாவுக்கும் உலக சினிமா பார்க்காதவர்கலுக்கும் புதுசு ஆனா உலக சினிமா பாக்குற எனக்கு புதுசு கிடையாது . நான் கடந்த வெள்ளிக்கிழமை பார்த்த BEAUTYFUL MIND படத்தை சற்று திறும்ப பார்த்தது போன்றே இருந்தது . மேலும் இந்த படத்தில் ஹீரோ கேமராமென் தான் தனுஷ் அல்ல. தமிழ் சினிமாவை பொருத்தவரை புதிய கோணமே மயக்கம் என்ன . இதை பார்த்த எனக்கு ஒரு புதிய மயக்கம் நேற்று முதல். நீங்களும் பாருங்க மயக்கம் வந்தா சொல்லுங்க.

Sunday, November 27, 2011

காலையில் காப்பி போயாச்சு கனினி வந்தாச்சு

இன்றய அவசர உலகில் காலையில் காப்பிக் குடிக்ககூட நேரமில்லை.
இப்போதெல்லாம் காலையில் எழுந்ததும் கனினியில் வேலை பார்பதற்கே நேரம் பத்தவில்லை. மேலும் முன்பெல்லாம் மக்கள் ஒருவருக்கொருவர் பழகுவதற்கு நேரம் பத்தாமல் இருந்த காலம் போயாச்சு ,இப்போ கனினியிடம் பழகுவதற்கே நேரம் பத்தவில்லை.

  இனியாவது கனினியிடம் பழகுவதை தவிற்த்து மக்களுடன் பழகுவோம். 

வளைதளம் முளுவதும் மாறியது

என் வளைத்தளத்தை முதலில் சினிமா செய்திகளை மட்டுமே எழுதிக்கொண்டு இருந்தேன். ஆனால் தற்போது நான் எனது அன்றாட நிகழ்வுகளை மட்டுமே எழுத இருக்கிறேன் .  சில சமயங்களில் மட்டுமே சினிமா செய்திகள் எழுதுவேன் .  எனது புதிய வளை முகவரி http://hussainvfx.blogspot.com/

Saturday, November 26, 2011

சந்தோசம் ஆனேன் இன்று


26/11/2011

                     
         
நான் பல நாட்களாக எனது ஃபோட்டோக்ராஃபி சார் (இளயராஜா) கிட்ட மாலையில் ஃப்ரியா பேசனும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் இன்று அது நடந்தது . இன்று அவரிடம் நிரய பேசினேன் ,நிரைய விசயங்கள் தெறிஞ்சிகிட்டன் . பேசுனப்பிரகுத்தான் நிறைய சந்தேகம் உருவாகிவிட்டது.இன்னும் அவர்கிட்ட இருந்து நிரைய விசயம் கத்துக்கனும் கத்துப்பேன்

Thursday, November 24, 2011

ராணா.. செட்டுகள் அமைக்கும் பணி தீவிரம்... வெளிநாட்டு பயணத்துக்கு ரஜினி ரெடி!

ரஜினி முழுமையாக குணமடைந்து பழையபடி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துவிட்டதால் ராணா படப்பிடிப்புக்கான பணிகள் முழு வேகத்தில் தொடங்கிவிட்டன.

ரஜினியின் கனவுப் படம் எனப்படும் ராணா தொடங்கிய நாளிலேயே ரஜினி நோய்வாய்ப்பட்டார். இதனால் அந்தப் படத்தின் நிலை கேள்விக்குரியதானது.

அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சைப் பெற்று உடல்நிலை தேறி வந்த பின்னும் ராணா ஷூட்டிங் உறுதியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் வரும் ஜனவரியிலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் என ரஜினியே சமீபத்தில் திருப்பதியில் அறிவித்தார்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த ரஜினி, இப்போது வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த வாரத்தில் மட்டும் அவர் நான்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ராணா படப்பிடிப்பு பணிகள் குறித்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமாருடன் கலந்து பேசிய ரஜினி, ஜனவரிக்குள் படத்தில் பணியாற்றும் அத்தனை கலைஞர்களும் தங்கள் கமிட்மெண்டை முடித்துக் கொண்டு ராணா செட்டுக்கு திரும்பிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பெரிய செட்கள் அமைக்கும் வேலை ஹைதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் ஆரம்பமாகிறது. மேலும் வெளிநாடுகளிலும் இந்தப் படத்தின் பெரும்பகுதியை எடுக்க விருப்பதால், ரஜினி அதற்கான வேலைகளில் தீவிரமாகியுள்ளாராம். முதல்கட்டமாக பிரிட்டனில் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்களாம்.

துபாய் போகும் ஆர்யா - அமலா பால்!

மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடிக்கும் வேட்டை படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

லிங்குசாமி இயக்க, அவரது சகோதரர் பொறுப்பில் உள்ள திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை யுடிவி நிறுவனம் வாங்கியுள்ளது.

தூத்துக்குடி, சாலக்குடி உள்ளிட்ட பகுதிகள் தொடர்ந்து 40 நாட்கள் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்துகிறார் இயக்குநர் லிங்குசாமி. இங்கு ஆர்யா - அமலா நடிக்கும் பாடல் காட்சி ஒன்று படமாகிறது.

இன்னொரு பாடலுக்காக ரூ 60 லட்சம் செலவில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போடப்பட்டு படமாக்கப்படுகிறது.

யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் இசைவெளியீட்டு விழாவை வரும் டிசம்பர் 2-ம் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அந்த டேமை சொல்லவில்லை- ஆனா முல்லைப் பெரியாறை இடிக்கணும்! - மலையாள இயக்குநரின் பல்டிசென்னை: 'டேம் 999' படத்தில் இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள எந்த அணைகள் பற்றியும் நான் சொல்லவே இல்லை. இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம், என்று பல்டியடித்துள்ளார் மலையாள இயக்குநர் சோஹன் ராய்.

ஆனால், 999 என்ற பெயரே முல்லைப் பெரியாரைத் தான் குறிக்கிறது. தமிழகத்திடம் இந்த அணைக்கான 999 ஆண்டு உரிமை உள்ளது. இதைத் தான் படத்தின் டைட்டிலில் குறி்ப்பிட்டுள்ளார் ராய்.

ஆனால் முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு, அதற்கு பதிலாக பெரிய அணை கட்டினால்தான் தமிழர்களுக்கு நிறைய தண்ணீர் கிடைக்கும் என்றும் அவர் சந்தடி சாக்கில் 'பிட்'டைப் போட்டு தனது உண்மையான நோக்கம் என்ன என்பதையும் அவரே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். ஒரு சினிமாக்காரருக்கு அணை குறித்த பேச்சு எதற்கு என்ற கேள்வியையும் இவரின் பதில் எழுப்பியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை உடைவது போல 'டேம் 999' என்ற ஆங்கிலப் படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியானதால், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று கூறி தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் படத்துக்காக நேற்று ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. பிரசாத் லேப் இனி இந்தப் படத்துக்கு எந்த ஒத்துழைப்பும் தர முடியாது என்று கூறியுள்ளது.

'டேம் 999' படம், ஐக்கிய அரபு நாடுகளில் வியாழக்கிழமையும், இந்தியாவில் வெள்ளிக்கிழமையும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் எங்கும் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இந்த நிலையில், டேம் 999 படத்தின் இயக்குனர் சோஹன் ராய் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மக்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது 'டேம் 999' திரைப்படம், தமிழக மக்களின் கலாசாரத்தையோ, உணர்வுகளையோ இழிவுபடுத்தக்கூடிய படம் அல்ல.

'டேம் 999' முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கபட்ட படம். சீனாவின் பாங்கியூ அணை 1975-ல் உடைந்ததால் ஏற்பட்ட பேரழிவில் சுமார் 2,50,000 பேர் பலியான சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

மக்கள் பலரின் வாழ்க்கையை ஓர் அணை பேரழிவின் மூலம் எப்படி மூழ்கடித்தது என்பதையை இந்தப் படம் எடுத்துரைக்கிறது. மாறாக, இந்தியாவில் உள்ள அணைகளைப் பற்றியோ, குறிப்பாக தமிழகத்தில் உள்ள அணைகளைப் பற்றியோ சொல்லவில்லை.

தமிழக மக்கள் மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. அவர்களது கலாசாரத்தையும், உணர்வுகளையும் பாதிக்கும் எந்த செயலலிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

எனது 'டேம் 999' படத்தில், தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழகத்துக்கோ தவறான எண்ணம் ஏற்படும் வகையில் எந்த ஒரு வசனமும் காட்சியும் இடம்பெறவில்லை என்று உறுதிகூறுகிறேன். இந்தியாவில் உள்ள எந்த ஒரு அணையையோ அல்லது தமிழக அணைகளையோ இந்தப் படத்தில் நான் குறிப்பிடவே இல்லை.

தமிழக மக்களின் உணர்வுகளை 'டேம் 999' எந்த விதத்திலும் பாதிக்காது என்று என்னால் நிச்சயமாக சொல்லமுடியும். இது, உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சினிமா மட்டுமே என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஒரு நல்ல நோக்கத்துக்காகவும், விழிப்பு உணர்வுக்காகவும் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தயவு செய்து தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மதிப்புமிக்க அரசியல் தலைவர்களுக்கு இந்தப் படத்தை பிரத்யேக காட்சி மூலம் திரையிட்டு காட்ட தயாராக இருக்கிறேன். அவர்கள் தவறானது எனச் சொல்லும் காட்சிகளையோ அல்லது வசனங்களையோ நீக்குவதற்கும் தயாராக இருக்கிறேன்.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தேவை என்பது எனது தனிப்பட்ட கருத்து. கேரளாவுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் நிலையில், பழைய அணையை இடித்துவிட்டு, விரைவில் பெரிய அணை ஒன்றை கட்டுவதே இதற்கு தீர்வு. அப்போது ன், தமிழக மக்களுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும்; கேரள மக்களின் வாழ்வாதாரமும் காக்கப்படும்," என்று கூறியுள்ளார்.

எந்த அணையைப் பற்றியும் குறிப்பிடவே இல்லை என்று சொல்லிவிட்டு, பின்னர் முல்லைப் பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என்று கூறுகிறார் சோஹன் ராய். இதிலிருந்தே, அவரது நோக்கம் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்பதே எனத் தெளிவாகியுள்ளது.

'வொய் திஸ் கொலை வெறிடி'!

வேறு ஒன்றிமில்லை... இது தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் '3' படத்தில் தனுஷே பாடியுள்ள ஒரு பாடலின் ஆரம்ப வரி.

இந்தப் பாடல் மட்டும் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது.

பாடலின் விசேஷம்... இது முழுக்க தமிங்கிலீஷில் எழுதப்பட்டிருப்பதுதான். எழுதிய பாடலாசிரியர் - தனுஷ்.

இந்தப் பாட்டு வெளியான கையோடு படு பாப்புலராகிவிட்டது. யு ட்யூப், பேஸ்புக் என சமூக வலை தளங்களில் சக்கைப் போடு போடுகிறது.

அனிருத் என்ற புதிய இசையமைப்பாளர் இசையில், தனுஷ் பாட, இடையிடையே ஸ்ருதி ஹாஸனும், ஐஸ்வர்யாவும் குரல் கொடுத்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் கட்டமாக இந்த ஒரு பாடலை மட்டும் வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா, மற்ற பாடல்களை அடுத்த விழாவில் வெளியிடுகிறார்.

மஸ்கட்டில் தேவா – எல் ஆர் ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

பிரபல இசையமைப்பாளர் தேவா மற்றும் பாடகி எல் ஆர் ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்குகிறது மஸ்கட் தமிழ்ச் சங்கம்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் சாதகப் பறவைகள் சங்கர் குழுவினர் நடத்தும் சிறப்பு இசை நிகழ்ச்சியில் தேவா மற்றும் எல் ஆர் ஈஸ்வரி பங்கேற்றுப் பாடுகிறார்கள். இவர்களுடன் கார்த்திக், சுசித்ரா, சைந்தவி உள்பட பிரபல பாடகர்களும் பங்கேற்கிறார்கள்.

தமிழ் சினிமா வரலாற்றில் மறக்கமுடியாத திரைப்பாடல்களை இந்த மேடையில் பாடுகிறார்கள்.

8000 ரசிகர்கள் அமரும் பிரமாண்ட அரங்கில் இந்த விழா நடக்கிறது. நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ராணாவுக்கு முன் ரஜினி நடிக்கும் கோச்சடையான்... அவதார் ஸ்டைலில் 3 டி படம்!

ராணா படம் இப்போதைக்கு இல்லை என்பதை ஒருவழியா ரஜினி தரப்பில் அறிவிக்கப்பட்டுவிட்டது. 

ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்துக்கு கோச்சடையான் என பெயரிடப்பட்டுள்ளது. அவதார் பாணியில் 3டி முறையில் உருவாகும் இந்தப் படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

சௌந்தர்யா ரஜினி இயக்குகிறார். கேஎஸ் ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார்.

கோச்சடையான் படத்தை அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர். கோச்சடையான் படம் முடிந்தபின் ராணாவில் ரஜினி நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் புதிய படத்தையும் ராணா தயாரிப்பாளர் ஈராஸ் மற்றும் மீடியா குளோபல் ஒன் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

Friday, November 11, 2011

Richa Gangopadhyay and Simbu
படத்தை ஒஸ்தியா எடுத்து என்ன பிரயோஜனம்... தியேட்டர்கள் ஒஸ்தியான பரொஜக்டர்கள், சவுண்ட் தரத்தோடு படத்தை திரையிட்டால்தானே காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்கள் திருப்தியாக உணர்வார்கள், என்று வருத்தப்படுகிறார் ஒஸ்தி பட தயாரிப்பாளர் ரமேஷ்.

தனுஷை வைத்து உத்தமபுத்திரன் படத்தை தாயாரித்தவரும் பெரும் பொருட்செலவில் சிம்புவை வைத்து ஒஸ்தி படத்தை தயாரித்து வருபவருமான ரமேஷ் இது தொடர்பாக மேலும் கூறுவதாவது:

படங்களை திரையரங்குகளில் திரையிடுவத‌ற்கு என்று விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளும் இருக்கின்றன. திரையரங்களில் படங்களை காண்பிக்க குறைப்பிட்ட அளவு துல்லியம் மிக்க புரஜக்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விதிகள் இருக்கின்றன. அதாவது 4கே அளவிலான துல்லியம் கொண்ட புரஜக்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

திரைப்படங்கள் தொடர்பான தொழில்நுட்ப விஷயங்களை நெறிப்படுத்தும் ஹாலிவுட் அமைப்பான எஸ் எம் பி டி ஈ வலியுறுத்தும் இந்த நெறிமுறைகளுக்கு உட்பட்டே திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட வேண்டும் .உலகம் முழுவதும் இந்த விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்ற‌ன.

இந்தியாவிலும் கூட திரைப்படங்கள் தொடர்பான சட்டம் இவற்றை வலியுறுத்துகின்றன.

ஆனால் சமீப காலமாக பல திரையரங்குகளில் இவை பின்பற்றப்படவில்லை என்பது தான் வேதனை. பெரும்பாலான திரையரங்குகளில் 1 கேவுக்கும் குறைவான துல்லியமான காட்சியை தரக்கூடிய புரஜக்டர்களே இருக்கின்றன. முன்னணி திரையரங்களில் சிலவும் இதற்கு விதிவிலக்கல்ல!

ஒரு சில மல்டிபிலக்ஸ் அரங்குகளில் ஒரு திரை தவிர மற்றவற்றில் தரக்குறைவான புரஜக்டர்கள் பயன்படுத்தப்படுகின்ற‌ன. இதனால் ரசிகர்கள் உயர்ந்த தரத்தில் காட்சிகளை பார்க்க முடியாமல் போகிறது. படங்கள் புள்ளி புள்ளியாக தெரியலாம்.

த‌யாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் முதல் போட்டு அதிந‌வீன தொழில்நுட்பத்தில் படம் எடுத்தாலும் அதன் உண்மையான நோக்கம் நிரைவேறுவதில்லை. காரனம் தரக்குறைவான புரஜக்டர்களால் ரசிக‌ர்கள் உருவாக்கப்பட்ட தரத்தில் படங்களை பார்த்து ரசிக்க முடிவதில்லை.

அது மட்டுமல்ல; இப்படி தரக்குறைவான முரையில் படங்களை பார்ப்பதால் கண்க‌ளுக்கு பாதிப்பு ஏற்படலாம். அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுகளை விட கூடுதல் ஒலி அளவால் காதுகள் பாதிக்கப்படலாம். அதிலும் குறிப்பாக குழந்தைகளின் மெனையாம செவிகளுக்கு இவை ஏற்றதல்ல. மேலை நாடுகளில் திரையரங்குகளில் ஒலி அளவை கண்காணிக்க மீட்டர் பொருத்தியிருப்பார்கள். இங்கு இது பற்றியெல்லாம் கவலைப்படுவதுல்லை.

குறிப்பிட்ட சில திரையரங்குகள் தவிர மற்றவற்றில் தரக்குறைவான புரஜக்டர்களே இருக்கின்றன. இந்த புரஜக்டர்கள் திரையரங்குகளில் திரையிட ஏற்றவை அல்ல. கருத்தரங்கு போன்றவ‌ற்றில் பயன்படுத்த மட்டுமே உகந்தவை.

ஆனால் திரையிடல் தொழிலை கைக்குள் வைத்திருக்கும் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இத்தகைய தரக்குறைவான புரஜக்டர்களை விநியோகித்து வருகின்றன. இதனால் ரசிகர்கள்தான் ஏமாற்றப்படுகின்ற‌னர்.

திரையரங்குகளில் விதிமுறை மீறப்படுவது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிறுவனங்கள் சார்பில் செல்வாக்கு மிக்க பெண் வழக்கறிஞ‌ர் ஆஜராகி வாதிட்டுள்ளர் என்பது வேதனையானது.

இதில் மேலும் வேதனை என்னவென்றால் வங்க தேசம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இந்த நிறுவனங்கள் தரக்குறைவற்ற புரஜக்டர்களை பயன்படுத்தியதால் வெளியேற்றப்பட்டு விட்டன என்ப‌துதான். ஆனால் இந்தியாவில் இவை சுத‌ந்திரமாக செயல்ப‌டுகின்ற‌ன. இது ஏன்?

சில நிறுவன‌ங்கள் லாப நோக்கிற்காக மோசமான புரஜக்டர்களை விநியோகித்து வருவதால் படம் எடுக்கும் தயாரிப்பளர்களும் பாதிக்கப்படுகின்றன‌ர். ரசிகர்களும் ஏமாற்றப்படுகின்ற‌னர்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட உள்ளேன்.

திரையுலக பிரமுகர்கள், குறிப்பாக ஃபிக்கி போன்ற அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் இது குறித்து மவுனமாக‌ இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

திரையுலகை காப்பாற்ற‌ ரசிகர்களை பாதுகாக்க திரையிடல் தொடர்பான விதிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்", என்றார்.

'ஒஸ்தி பிரியாணி'

Simbu with Briyani
வாயைக் கட்டி, உடம்பை ஏத்தி படாதபாடுபட்டு ஒஸ்தி படத்தில் நடித்ததற்காக, சிம்புவுக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார் இயக்குநர் தரணி.

ஒஸ்தி படத்துக்காக சிம்பு கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடலை மிடுக்கான தோற்றத்துக்கு கொண்டு வந்தாராம். உணவில் செம கட்டுப்பாடாம். ஒரே ஷெட்டியூலில் படத்தினை முடித்து க்ளைமாக்ஸ் காட்சியை சென்னையில் படமாக்கி முடித்தனர்.

நேற்று இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது. பூசணிக்காய் உடைத்து படப்பிடிப்பை முடித்தார்களாம் படக்குழுவினர்.

சிம்புவுக்கு பிரியாணி என்றால் அப்படி ஒரு பிரியமாம். ஆனால் இந்தப் படத்துக்காக கடந்த 2 மாதங்களாக பிரியாணி சாப்பிடவில்லையாம். அவரது பிரியாணி விருப்பத்தைப் புரிந்து கொண்டு, படப்பிடிப்பு முடிந்தவுடன் இயக்குனர் தரணி பிரியாணி விருந்து படைத்திருக்கிறார்.

இது குறித்து சிம்பு "கடந்த இரண்டு மாதங்களாக இப்படத்திற்காக பிரியாணி சாப்பிட முடியவில்லை. ஆகையால் தரணி எனக்கு மொத்த படப்பிடிப்பு முடிந்தவுடன் பிரியாணி விருந்து கொடுத்தார்," என்றார்.

பிரியாணி, சிக்ஸ் பேக்கெல்லாம் சரி... ரிலீசானதும் படம் பெட்டிக்கு 'பேக்கப்' ஆக இருக்கணும்!

Thursday, November 10, 2011

ரஜினியின் ராணா கைவிடப்படுமா? - கோலிவுட்டில் பரபரப்பு

Raana
இதோ அதோ என்று தள்ளிப் போடப்பட்டு வந்த ரஜினியின் ராணா படம் கைவிடப்படக்கூடும் என கோடம்பாக்கத்தில் பலமான வதந்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன.

ராணா படம் துவங்கிய தினத்தன்றுதான் ரஜினியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஒரே ஒரு நாள் ஷூட்டிங் நடந்ததோடு சரி. அதன் பிறகு தொடர்ந்து மருத்துவமனை, சிகிச்சை, ஓய்வு என்று போகின்றன ரஜினியின் நாட்கள்.

ஆனாலும், சிங்கப்பூரிலிருந்து சிகிச்சை முடிந்து வந்த ரஜினி, ராணாவை மீண்டும் தொடர ஆர்வம் காட்டி வந்தார். அந்தப் படம் குறித்து தொடர் ஆலோசனைகள் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஜினி இன்னும் 6 மாத காலத்துக்கு கண்டிப்பாக ஓய்வெடுத்தாக வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குநர் ரவிக்குமார் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "இந்தப் படத்தை இப்போது தொடர முடியாத நிலை உள்ளது. எனவே இதை தள்ளிப் போட்டுவிட்டு, முத்து மாதிரி ஒரு லைட்டான படத்தை எடுக்கலாமா என ரஜினி சார் ஆலோசித்து வருகிறார். இதுகுறித்து இயக்குநர் ரவிக்குமாரும் ரஜினியும் ஆலோசனை நடத்தியது உண்மைதான்," என்றார்.

ஆனால் இதுபற்றி ரஜினியோ ரவிக்குமாரோ அல்லது தயாரிப்பாளரோ இதுவரை எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'குளிப்பது' எப்படி?-'டெமோ' காட்டும் பூனம் பாண்டே!

Poonam Pandey
சிலருக்கு வாழ்க்கை இயல்பிலேயே எப்போதும் பரபரப்பாக இருக்கும். சிலரோ, கடுமையாக முயற்சித்து எப்போதும் பரபரப்பாக வைத்துக் கொள்ள முயல்வார்கள். இதில் பூனம் பாண்டே 2வது ரகம் போல.

இவரை சில மாதங்களுக்கு முன்பு வரை நிறையப் பேருக்குத் தெரியாது. ஆனால் இவர் விட்ட ஒரே ஒரு ஸ்டேட்மென்ட்டால் உலகம் பூராவும் பரவி பாப்புலராகி விட்டார். இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக காட்சி தருவேன் என்று இவர் விட்ட ஸ்டேட்மென்ட்டால் வலையுலகமே வாரிச் சுருட்டிக் கொண்டு பூனம் பாண்டே குறித்த செய்திகளை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தது.

ஆனால் தான் சொன்னபடி பூனம் செய்யவில்லை என்பது வேறு கதை. அதற்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டு அம்பேல் என எஸ்கேப் ஆகி விட்டார் பூனம். இருப்பினும் அத்துடன் நில்லாத அவர் தற்போது பார்ட் பார்ட்டாக தனது உடல் பாகங்களை உலகுக்குக் காட்ட ஆரம்பித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனது முக்கால் கவர்ச்சிகரமான போஸ்களை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார். பின்னர் அவரது எடுப்பான முன்னழகுப் படங்களை உலவ விட்டார். தற்போது மேலும் ஒரு படி முன்னேறி, குளிக்கும் காட்சி ஒன்றை வீடியோவில் வெளியிட்டு மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளார்.

தனது ட்விட்டர் தளத்தில்தான் இந்த வீடியோவையும் இணைத்துள்ளார். 18 வயதுக்குட்பட்டவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம் என்ற குறிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் குளியல் அறையில்.,பாத் டப்பில் நின்றபடியும், வளைந்து நெளிந்தபடியும், ஹேன்ட் ஷவர் மூலம் தனது உடலில் தண்ணீரை பீய்ச்சியடித்தபடியும் காட்சி தருகிறார் பூனம்.

வெள்ளை நிறத்தில் வெறும் உள்ளாடைகளுடன் மட்டும் காட்சி தரும் பூனம் பாண்டேவின் இந்த வீடியோ படு கவர்ச்சிகரமாக இருக்கிறது. விரைவில் பூனம் பாண்டேவின் புதிய இணையதளம் செயல்பாட்டுக்கு வருகிறது. அதில்தான் இந்த வீடியோ மற்றும் இதுபோன்ற வீடியோக்கள், புகைப்படங்கள் இடம் பெறவுள்ளன. இந்த குளியலறை வீடியோவின் இறுதியில், விரைவில் இதுபோன்ற பல வீடியோக்களை எதிர்பார்த்துக் காத்திருங்கள் என்ற அறிவிப்புடன், காட்சி முடிகிறது

சச்சின் படத்துடன் 'முழு நிர்வாணத்தில்' பூனம் பாண்டே!

Poonam Pandey
மும்பை: சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்க்கையில் யாருமே தராத அதிர்ச்சியை ஒருவர் தந்துள்ளார். அவர் நிர்வாணமாக தோன்றப் போவதாக அவ்வப்போது பயமுறுத்தி வந்த பூனம் பாண்டே!

காரணம் வேறொன்றுமில்லை... இத்தனை நாள் அரை, முக்கால் நிர்வாணம் காட்டி வந்த பூனம், இப்போது முழு நிர்வாணமானகிவிட்டதுதான்!

கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு மாடல் பூனம் பாண்டே என்றால் யார் என்று தான் அனைவரும் கேட்டார்கள். ஆனால் இந்திய அணி கோப்பையை வென்றால் வீரர்களுக்கு முன்பு நிர்வாணமாக நிற்பதாக அறிவித்ததையடுத்து பிரபலமானார்.

தற்போது பூனம் பாண்டே கையில் ஒரு விஷ்ணு படத்துடன் நிர்வாண போய் கொடுத்துள்ளார். அதை ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நமஸ்கரிக்கிறார். அந்த விஷ்ணு படத்தை உற்றுப் பார்த்தால் முகம் சச்சினுடைது. விஷ்ணு கையில் பேட், தலையில் ஹெல்மெட், கையில் உலகக் கோப்பையை வைத்திருக்கிறார். இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெளிவாகத் தெரிந்தாலும் இணையத்தில் சக்கைப் போடு போடுகிறது.

மேலும் மகா விஷ்ணுவின் படத்துடன் பூணம் நிர்வாணமாக நிற்பது போன்ற இந்த மாரிபிங் படத்தின் மூலம், சுவாமியின் படத்தையும் அவமரியாதை செய்துள்ளனர்.

இந்த புகைப்படத்தைப் பார்த்துதான் சச்சின் டெண்டுல்கர் அதிர்ந்து போனார். என்னை வைத்து என்ன கூத்தெல்லாம் அடிக்கிறார்களே என்று நொந்துவிட்டார்.

படத்தைப் பார்த்த பூனம் டுவிட்டரில், "எனது ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இது போன்று மார்பிங் புகைப்படத்தைப் பார்த்து வருத்தப்படுகிறேன். ஏனென்றால் எனக்கு கிரிக்கெட் ஒரு மதம் மாதிரி,' என்று எழுதியுள்ளார்.

அப்போது கூட தன்னை நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்டதற்காக அவர் வருந்தவில்லை, கிரிகெட்டுக்காகத்தான் வருத்தப்படுகிறாராம்

சிம்பு கூட நடிக்க மாட்டேன்

Simbu and Rana Daggubati
'வடசென்னை' படத்தில் சிம்புவுடன் நடிக்க தெலுங்கு நடிகர் ராணா மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இயக்குனர் வெற்றிமாறன் சிம்புவை வைத்து 'வடசென்னை' என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஒருவரை நடிக்க வைக்க வெற்றிமாறன் விரும்பினார். இதற்காக ராணாவை அழைத்து கதையை கூறியுள்ளார்.

கதையை கேட்டுவிட்டு, தனுஷை வைத்து 'பொல்லாதவன்' 'ஆடுகளம்' ஆகிய வெற்றி படங்களை கொடுத்துள்ள உங்கள் புதிய படத்தில் கட்டாயம் நடிக்கிறேன் என்று உறுதியளித்தார் ராணா. அதன்பின் படத்தின் ஹீரோ யார்? என்று கேட்டார்.

அதற்கு வெற்றிமாறன் ஹீரோவாக சிம்பு நடிக்கிறார் என்று கூறினார். சிம்பு என்று கூறியவுடன் சாரி சர், என்னால் நடிக்க முடியாது என்று நழுவிவிட்டார்.

Wednesday, November 09, 2011

பாலாவின் இயக்கத்தில் அதர்வா

 ஐந்தே மாதத்தில் பாலா படம்

அவன்-இவன் படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக அதர்வா நடிப்பது உருதியாகிவிட்டது. இசைப்பணியை ஜி.வி.பிரகாஷ் பார்க்கிறார்.இந்த படம் இன்னும்  ஐந்தே மாதத்தில் வரும் என்று கூறப்பட்டுள்ளது.  

வம்சம் தெலுங்கு வெர்சன்

வம்சம் தெலுங்கு வெர்சன்

பாண்டிராஜ் இயக்கிய ’வம்சம் படம்’ தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

கிறிஸ்துமஸ் ரிலீஸ்

லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் , ஆர்யா நடிக்கும் ‘ வேட்டை’ படம் கிருஸ்துமஸ் அன்று ரிலீஸ் ஆகிறது.

உலக நாயகன் இடத்தில் அஜித் !

உலக நயகன் இடத்தில் தல அஜித் !
ஏ.எம்.ரத்னம் தயா¡¢ப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்தப் படம் 'இந்தியன்'. இந்தப் படத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி வேடத்தில் நடித்து, 'இந்தியன் தாத்தா' என்று அழைக்கப்படும் அளவுக்கு அந்தப் பாத்திரத்துக்கு வலு சேர்த்தர் கமல்.படத்தின் இறுதியில் இயக்குநர் மீண்டும் இந்தியன் தாத்தா வரலாம் என்பது போல படத்தை முடித்திருந்தார்.இந்த படத்தின் உ¡¢மை ஏ.எம்.ரத்னம் கைவசம் உள்ளதால், இதனுடைய தொடர்ச்சியைத் தயா¡¢க்கும் எண்ணத்தில் இருக்கிறார் ஏ.எம்.ரத்னம். இதற்காக இயக்குநர் ஷங்கா¢டம் பேசியுள்ளார். இந்த படத்தில் தல அஜித் நடிக்க பொவதக உதவி இயக்குநர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது

எங்களால் நாட்டிற்க்கு பாதிப்பு இல்லை - சூர்யா பேட்டி

அன்மையில் வெளிவந்து வெற்றிநடைபோடும் 7ஆம் அறிவு படத்திற்காக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றை சூர்யா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். அந்த சந்திப்பில் பிஸ்மி என்னும் ஒரு பத்திரிக்கையாளர் சூர்யாவிடம் “ நீங்களும் விஜயும் கதையை சேர் பன்னுவீங்களா என்று கேட்டதர்க்கு இல்லை என்று கூறிவிட்டார்.கேள்வி கேட்டவர் நான் ஏன் கேட்கிறேன் என்றால் “ நீங்க  சீன நாட்டு தீவிரவாதியோடு சண்ட போடுறீ ங்க அந்த பக்கம் விஜய் பாகிஸ்தான் தீவிரவாதியோடு சண்டபோடுறாறு இதுனால நாட்டுக்கு ஏதும் பதிப்பு வந்துவிடாதுல என்று நகைச்சுவையாக கேட்டதற்க்கு இல்லை என்று கூறி வயிறு குலுங்க சிரித்தார். மேலும் அவரது  நடிப்பை பல ஜம்பவாகள் பராட்டியதயும் கூறினார்.