Pages

Labels

Tuesday, July 10, 2012

ரூ.1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த த்ரிஷா, ஸ்ரேயா


ரூ.1 கோடி சம்பளம் கொடுக்க தயாராக இருந்தபோதிலும் புதுமுக நடிகருடன் ஜோடி சேர நடிகைகள் த்ரிஷா, ஸ்ரேயா ஆகியோர் மறுத்துவிட்டனர்.
புதுமுக நடிகர் அச்சுதன் சங்கர் என்பவர் கோப்பெருந்தேவி என்ற படத்தை இயக்கி தானே ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்த படத்தில் பெரிய நடிகைகளை நடிக்க வைக்க நினைத்தார். இதையடுத்து த்ரிஷாவை அணுகி தனக்கு ஜோடியாக நடிக்க கேட்டுள்ளார். இதற்காக த்ரிஷாவுக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
த்ரிஷா முதலில் ஓ.கே. சொல்லிவிட்டு பிறகு புதுமுக ஹீரோவோடா நடிக்க என்று நினைத்து மறுத்துவிட்டார். இதையடுத்து ஸ்ரோயாவை கேட்டுள்ளனர். அவருக்கும் ரூ. 1 கோடி சம்பளமாகக் கூறப்பட்டது. ஆனால் அவரும் புதுமுக ஹீரோ அச்சுதன் சங்கருடன் நடிக்க மறுத்துவிட்டார்.
த்ரிஷாவுடன் நடிக்க இளம் ஹீரோக்கள் எல்லாம் வரிசையில் நிற்கையில் அவர் எப்படி புதுமுக நாயகனுடன் நடிக்க ஒப்புக் கொள்வார். ஸ்ரேயா கையில் படங்கள் அவ்வளவாக இல்லாவிட்டாலும் எதுக்கு ரிஸ்க் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ.

பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் டோக்கியோவில் கோச்சடையான் ஆடியோ ரிலீஸ்!!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் பட இசை வெளியீட்டை இந்த முறை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்துகின்றனர்.
ஆடியோ வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில், வைரமுத்து வரிகளில் 5 பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலை ரஜினியே பாடியுள்ளார்.
ரஜினியின் முந்தைய படமான எந்திரன் இசை வெளியீட்டை மலேசியாவில் சன் டிவி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
படத்தை சூப்பர் ஸ்டார் ரஜியின் பிறந்த நாளான 12.12.12-ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டனில் பிரிமியர் ஷோக்கள்
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு டோக்கியோவில் என்றால், படத்தின் சிறப்புக் காட்சிகள் லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், சிங்கப்பூர் போன்ற நகரங்களில் நடக்கவிருக்கிறது.
இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையில் பிரிமியர் ஷோக்களை நடத்தவிருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
100 சதவீதம் ஹாலிவுட் ஸ்டைலில் படத்துக்கு புரமோஷனல் வேலைகளைச் செய்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.
ரஜினி கலந்து கொண்ட கோச்சடையான் பிரஸ் மீட்டே லண்டனில் நடந்தது குறிப்பிடத்தக்கது

எதிர்ப்பார்த்த ஸ்ரீப்ரியா குடும்பம் - வராத சிவாஜி குடும்பம்


சிவாஜி குடும்பத்து வாரிசுகளுள் ஒருவர். ஸ்ரீப்ரியாவின் அக்கா மீனாவுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாருக்கும் பிறந்தவர். ஊர் உலகறிய மீனா தன் மனைவி என்றும், சிவாஜி தேவ் தன் மகன் என்றும் ராம்குமாரே மேடை போட்டு அறிவித்தும் விட்டார்.
சிவாஜி தேவ் முதலில் நடித்த படம் சிங்கக்குட்டி. இந்தப் படத்தின் வெளியீடு ஏக தடபுடலாகத்தான் நடந்தது. இந்தப் படவிழாக்களில் நேரடியாக ராம்குமார் பங்கேற்காவிட்டாலும், செய்தியாளர்களிடம் தன் மகனுக்காக பேசவே செய்தார்.
அந்தப் படம் சரியாகப் போகவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு சிவாஜி தேவ் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒன்று 'புதுமுகங்கள் தேவை'.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேபில் நடந்தது. விழாவுக்கு ஸ்ரீபிரியா, அவர் அக்கா மீனா ராம்குமார் ஆகியோர் வந்திருந்தனர். தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் ஆஜராகியிருந்தனர்.
விழாவுக்கு பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டவர் ராம்குமார்தான். கடைசி வரை அவர் வருவார் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் ஏனோ ராம்குமார் வரவே இல்லை!