பரபரவென காட்சிகள் நகர்வது போல படமெடுத்தால் போதும்... மக்கள் குறைகளை
மறந்துவிடுவார்கள் என்ற வீச்சறுவா புகழ் ஹரியின் பாலிசிதான் இனி சரிப்பட்டு
வரும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது முருகதாஸ் என்ற கமெண்ட்
இப்போது எல்லோர் வாயிலும் வர ஆரம்பித்துவிட்டது, துப்பாக்கி படம் ஓடும்
அரங்குகளில்.
தீபாவளிக்கு வந்த படங்களில் பரவாயில்லை என்ற மவுத் டாக் வந்துவிட்டது. அதை நம்பி, விஜய்யும் விடிய விடிய பார்ட்டி கொடுத்து, அந்த தெம்போடு அடுத்த துப்பாக்கிக்கு ரெடியாகிவிட்டார்.ஆனால் துப்பாக்கி ஓடும் தியேட்டர்களில் ஜனங்களின் பல்ஸ் என்ன என்று பார்க்கப் புறப்பட்டோம்.
அடடா... அவங்கதாங்க நிஜமான விமர்சகர்கள். எந்த முன் தயாரிப்புமின்றி, படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் அவர்கள் அடிக்கிற கமெண்டைக் கேட்டால், ஏன்டா இப்படி ஒரு படத்தில் நடித்தோம் என விஜய்யும் (அவருக்கு அப்படியெல்லாம் தோணுமாங்கிறது சந்தேகம்தான்...), இவரோடு ஏன் சேர்ந்தோம் என இயக்குநர் முருகதாஸும் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.
இந்தப் படத்தில் எந்தக் காட்சியிலாவது நம்பகத்தன்மை அல்லது உண்மை இருக்கிறதா என்பது முதல் கேள்வி.
படம் முழுக்க மிலிட்டரி ஆபீ.. ஸர் விஜய், ஏதோ செட் தோசை சுடுவது போல எல்லோரையும் சுட்டுக் கொண்டே இருக்கிறார். எழவு... அதைக் கேட்க ஒரு போலீஸ் கூட குறுக்கே வரவே மாட்டேங்குது. மும்பையில் போலீஸ்காரங்க அவ்வளவு டம்மி பீஸுங்களா...?
அட ஒரு கப்பலுக்கு வெடி வைக்கிறாய்ங்கய்யா... அந்தக் காட்சியை 50 ரூபாய்க்கு இங்கிலீஷ் பட சிடி வாங்கிப் பாத்து அப்படியே சுட்டு எடுத்திருந்தா கூட நல்லா வந்திருக்கும். கெரகம்... இவர்களது லோ குவாலிட்டி கிராபிக்ஸை பாருங்கள்... கப்பல் வெடிச்சதும் ஏதோ சாம்பிராணி போட்ட மாதிரி சவசவன்னு கிளம்புது புகை!
ஆமா... இந்த சத்யனையெல்லாம் யாரும் கேப்பாரே இல்லையா... காமெடி என்ற பெயரில் அவர் போடற சத்தம் கர்ண கொடூரம்டா சாமி.. பேசாம அவரை ஊமையாவே நடிக்க வச்சிருக்கலாம்..!
அவருக்கு கொஞ்சமும் சளைக்காத சொதப்பல் காமெடி பீஸ் ஜெயராம்.
மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடிப்பை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனா ஹீரோ நம்ம இளைய தளபதியாச்சே... மொத்த கிரெடிட்டும் அவருக்குத்தானே சேரணும்... சும்மா... இடது கையால் சொடக்குப் போட்டபடியே தீவிரவாதிகள் கூட்டம் மொத்தத்தையும் ஒழித்துக் கட்டுகிறார் பாருங்க... 2008 மும்பை குண்டு வெடிப்பப்போ இந்தாளு எங்கேய்யா போயிருந்தார்னு தியேட்டர்ல கமெண்ட் அனல் பறக்குது!
அப்புறம் இந்த ஹீரோயின்...
குணா படத்துல கமல் சொல்வாரே.. நடு நடுவே மானே தேனே பொன்மானேன்னு போட்டுக்கன்னு... அப்படித்தான்... துப்பாக்கி சத்தம் கொஞ்சம் காதைக் கிழிக்கும்போது, இந்தப் பொண்ணை லம்பாடி டிரஸ்ல ஆடவிட்டு, டமார்னு மறைச்சு வெச்சுக்கிறார் டைரக்டர். அப்புறம் ஒரு மூணு ரீல் கழிச்சு திரும்ப கண்ல காட்டறார். இப்படியே காட்டி காட்டி... க்ளைமாக்ஸ்ல கரெக்டா ஹீரோவோட டூயட் ஆட வரவச்சுடறார்!
படத்தை பார்க்கும்போது பலர் கோபத்தில் அங்கும் இங்கும் திரும்பிப் பார்ப்பதும், பக்கத்தில் இருப்பவர் ரொம்ப நேரத்துக்கு முன்பே தூங்கிவிட்டதை பார்த்து, 'அட, இது நல்லா ஐடியாவா இருக்கே' என்று அவர்களில் பலரும் தூங்க ஆரம்பித்ததும் தான் நமது ரவுண்ட்-அப்பின் ஹைலைட்!
ரமணா மாதிரி சென்சிபிளான படம் கொடுத்த முருகதாஸ்தானா இதுன்னு ரொம்ப சந்தேகமாவும்... இவரும் விஜய் கூட சேர்ந்து இப்படி ஆகிட்டாரேங்கிற வருத்தமும்தான், படம் முடிஞ்சதும் எனக்கு மிஞ்சிச்சு!

0 comments:
Post a Comment