Saturday, March 17, 2012
எனது மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை இன்று!
நான் படிக்கும் சாஃப்ட்வியூ மீடியா கல்லூரியில் மாதம் தோறும் மாணவர்களின் படைப்பில் ஒரு மாணவர் பயிற்ச்சி இதழ் வெளிவரும். அதை போல இந்த மாதம் மார்ச் மாத இதழை நான் ஆசிரியராக ஏற்றுக்கொண்டேன் மேலும் எனது பணிகளுக்கு துணையாக எனது நண்பர் திரு. சசிகுமார் துணை ஆசிரியராக பொருப்பேற்றுக் கொண்டார். மேலும் இந்த இதழை நான் முடிக்க எனக்கு பெறிதும் உதவியாக இருந்த “அண்ணன் தாஸ்” மற்றும் எனது இதழியல் ஆசிரியர் “திரு.முத்துப்பாண்டி”
அவர்களுக்கும் எனது உள்ளம் கணிந்த நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன். மேலும் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சாஃப்ட்வியூ மீடியா கல்லூரிக்கும் நன்றி ! நன்றி! நன்றி!.............
இந்த இதழை எமது பள்ளியின் முன்னால் மாணவியும் “கனா கானும் காலம்” சின்னத்திரை தொடர் நடிகை “ஹரி ப்ரியா” அவர்கள் இன்று காலையில் பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் வெளியிட்டார் அதை ஆசிரியர் என்ற முறையில் நான் பெற்றுக்கொண்டேன்....
Subscribe to:
Posts (Atom)